கேப்டனுக்கு நோ சொன்ன கலைஞர் டிவி!

By Staff

Vijaykanth in Engal Aasaan
விஜய்காந்த் நடித்து விரைவில் வெளிவரவுள்ள எங்கள் ஆசான் பட தொலைக்காட்சி உரிமை தங்களைத் தேடி வந்தும், வேண்டாம் என மறுத்துவிட்டது கலைஞர் டிவி.

அரசிலில் எதிரும் புதிருமாக இருந்தாலும் திரைத் தொழிலில் அதுபற்றி அலட்டிக் கொள்ளாமல் விஜய்காந்த் நடித்த அரசங்கம் படத்தை முன்பு கலைஞர் டிவிதான் வாங்கியது. அந்தப் படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்த போதிலும் பாக்ஸ் ஆபீஸ் எனப்படும் வசூல் வட்டார நிலவரம் அத்தனை திருப்திகரமாக இல்லையாம். படத்தை விநியோகித்த பிரமிட் சாய்மீராவுக்கு இந்தப் படம் மூலம் ரூ.5 கோடி நஷ்டம் என்கிறார்கள்.

இதையெல்லாம் கேள்விப்பட்ட முதல்வர் கலைஞர், விஜயகாந்தின் அடுத்த படமான எங்கள் ஆசான் உரிமையை வேண்டாம் என கூறிவிட்டாராம்.

சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துள்ள குசேலன் படம்தான் இப்போது கலைஞர் டிவி லேட்டஸ்டாக வாங்கியுள்ள திரைப்படம். இந்தப் படத்துக்கு அந்த நிறுவனம் கொடுத்துள்ள விலை, தசாவதாரத்துக்குக் கொடுத்ததை விட ரூ. 51 லட்சம் அதிகமாம்.

அடேங்கப்பா...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X