'கந்தசாமி'யின் அமெரிக்க சாதனை!

ரஜினிகாந்த், ஷாருக்கான், கமல்ஹாசனுக்குப் பிறகு விக்ரம் இப்போது இந்த எலைட் பட்டியலில் இணைந்துள்ளார்.
அவரது நடிப்பில் கலைப்புலி தாணு தயாரிப்பில் சுசி கணேசன் உருவாக்கி வரும் கந்தசாமி திரைப்படம் ரூபாய் ஒரு கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
மோகன் என்பவர்தான் இப்படத்தின் உரிமையை இவ்வளவு விலை கொடுத்து வாங்கியுள்ளார்.
மெக்ஸிகோ நாட்டின் இதுவரை யாரும் பார்க்காத அரிய பிரதேசங்களில் படமாக்கப்பட்டுள்ள கந்தசாமியின் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளன.
ராபின் ஹூட் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை தேவிஸ்ரீபிரசாத். செப்டம்பர் மாதம் இப்படத்தை திரையிடும் திட்டத்தில் இருக்கிறாராம் தாணு. அல்லது ஒரேயடியாக தீபாவளிக்கு ரிலீஸ் செய்து கொள்ளலாமா என்ற யோசனையும் உள்ளதாம் தாணுவுக்கு.
Comments


Click it and Unblock the Notifications