அஜீத்தின் 50வது படத்தின் இயக்குநர் கே.வி. ஆனந்த்?

By Staff

Ajith Kumar
விஜய்யின் 50 வது பட இயக்குநர் யார் என்ற கண்ணாமூச்சி இன்று முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்து அஜீத்தின் 50 வது படத்துக்கு யார் இயக்குநர் என்பதில் இன்னும் தெளிவற்ற நிலை உள்ளது.

இதுவரை இந்தப்படத்தை இயக்குவோருக்கான ரேஸில் வெங்கட்பிரபு மட்டுமே ஸோலோவாக ஓடிக் கொண்டிருந்தார். இப்போது அவருடன் அயன் வெற்றிப்படம் தந்த கேவி ஆனந்தும் இணைந்துள்ளார்.

கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் இந்தப் படம் குறித்து இன்று கேவி ஆனந்துடன் ஆலோசனை செய்கிறார் அஜீத் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

சூர்யா நடிக்கும் படத்தை இயக்க இன்னும் ஒன்றரை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளதால், அதற்குள் அஜீத் படத்தை இயக்க ஆனந்த் முடிவு செய்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.

அஜீத்தை இயக்கப்போவது வெங்கட் பிரபுவா, ஆனந்தா என்பது இன்று அல்லது நாளை தெரிந்துவிடும்.

இதற்கிடையே அசல் படப்பிடிப்பை முடித்துக் கொண்ட அஜீத், நேற்று சென்னை திரும்பினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X