23 ஆண்டுக்கு பிறகு மலையாளத்தில் மீண்டும் நடிக்கும் கமல்

By Sudha

Kamal Hassan
23 ஆண்டுகளுக்குப் பிறகு உலக நாயகன் கமல் மீண்டும் மலையாளப் படமொன்றில் நடிக்க இருக்கிறார்.

கமல் போர் பிரண்ட்ஸ் என்ற மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் இயக்குநர் சசி சுரேந்திரன். இவர் மலையாள திரையுலகின் வெற்றிகரமான இயக்குநர்களில் ஒருவர். இவர் அன்மையில் இயக்கிய பல மலையாள படங்கள் வெற்றியடைந்துள்ளன.

போர் பிரண்ட்ஸ் படத்தின் கதாநாயகன் ஜெயராம். இதில் ஜெயசூர்யா, மீரா ஜாஸ்மின் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதில் நடிக்க கமலை அணுகியபோது அவர் உடனே ஒப்புக்கொண்டார். அதற்கு காரணம் அவருக்கு கதை மிகவும் பிடித்து விட்டதாம். கமல் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் படமாக்கப்படுகிறது.

கமலின் நெருங்கிய நண்பர் ஜெயராம் என்பது அனைவரும் அறிந்ததே. கமலும் ஜெயராமும் இணைந்து, 23 ஆண்டுக்கு முன் சாணக்யா என்ற மலையாள படத்தில் நடித்தனர். அதன் பின்னர் கமல் மலையாளத்திற்குப் போகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் மலையாளத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் சந்தோஷம் என்று ஏக்கத்திலேயே இருந்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் மலையாள வாய்ப்பு கமலுக்கு வந்துள்ளது. இதை சம்மதித்ததற்கு ஜெயராம் நண்பர் என்பதும் காரணம். இதே போன்று ஜெயராமும் கமல் படங்களில் அவ்வப்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து இயக்குனர் சசி சுரேந்திரன் கூறியதாவது,

இந்த படத்தின் கதை கமல் சாருக்கு பிடித்திருந்தது. அதனால்,அவர் உடனே நடிக்க சம்மதித்துவிட்டார். கதைக்கு திருப்புமுனையாக அவரது கதாபாத்திரம் இருக்கும்.

கமல் என்னிடம் கூறும்போது, ஜெயராம் என்னுடைய நல்ல நண்பர் என்பதால் தான் நான் இதில நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன் என்றார். இதற்கான படப்பிடிப்பு வருகிற 10ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது என்று அவர் கூறினார்.

சதி லீலாவதியில் வந்தது போல ஒரு கெளரவ வேடத்தில் கமல் நடிக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X