ஒழுங்கா இரு!

டாக்டர் ராஜசேகர் பாரதிராஜாவின் கண்டுபிடிப்பு. புதுமைப் பெண்ணில் வில்லனாக நடித்தார். ஆனால் ஆந்திராவில் இவரை அதிரடி நாயகனாக ஏற்றுக் கொண்டதால், கோலிவுட் பக்கம் அவ்வப்போது டப்பிங் நாயகனாகத்தான் எட்டிப் பார்க்கிறார். இப்போது ஆந்திர அரசியலிலும் புகுந்துள்ளார்.
இதுதாண்டா போலீஸ் என்று தலைப்பு வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பின், அதே பாணியை தனது ஸ்டைலாக கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டார் ராஜசேகர்.
போனவருடம், உடம்பு எப்படி இருக்கு? என்ற தலைப்பில் ஒரு பக்கா கமர்ஷியல் படத்தைத் தந்து, சரத் குமாரின் நம்நாட்டை ஓரம் கட்டிய ராஜசேகர், இந்த ஆண்டும் ஒரு டப்பிங் படம் தரப் போகிறார்.
படத்துக்குப் பெயர் 'ஒழுங்கா இரு' !
ஷெரில் பிண்டோ, நீத்து சந்திரா, சஞ்சனா என மூன்று ஹீராயின்களுடன் டூயட் பாடுகிறாராம் ராஜசேகர் இந்தப் படத்தில்.
இதேபடம் தெலுங்கில் சத்யமேவ ஜெயதே எனும் தலைப்பில் ரிலீசாகிறது.
படத்தை இயக்கப்போவது யார் தெரியுமோ?
நிஜ வாழ்க்கையில் அவரை இயக்கிக் கொண்டிருக்கும் மனைவி ஜீவிதாவேதான்!


Click it and Unblock the Notifications











