ரஜினி இமயமலைப் பயணம்

தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு தனிமையில் ஆன்மீகப் பயணம் மேற்கொள்வது ரஜினியின் வழக்கம். அதன்படி குசேலன் படப்பிடிப்பு முடிந்து ரீலீசுக்குத் தயாராக உள்ளது.
நேற்று மாலை சென்னையிலிருந்து புறப்பட்ட ரஜினி டெல்லிக்குப் போய் அங்கிருந்து இமயமலை செல்கிறார்.
20 நாட்கள் இமய மலையில் தங்கியிருக்கும் அவர் அங்குள்ள தனது குரு பாபாஜி குகைக் கோயிலுக்குச் செல்கிறார்.
ஜூலை 25-ம் தேதி குசேலன் திரைப்படம் வெளியாகிறது. அதற்கு இரு தினங்களுக்கு முன் சென்னை திரும்பும் ரஜினி, குசேலன் படத்தை சத்யம் திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications