ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம்

By Chakra

Shahrukh Khan
பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்துக்கு நடிகர் ஷாருக் கான் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி நாளை முதல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக யோகா குரு பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ஷாருக் கான் நடித்துள்ள புதிய திரைப்படமான ரா.ஒன் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்தது.

அதில் பேசிய ஷாருக், யோகா குரு பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். அவரை நான் ஆதரிக்க மாட்டேன். ஒருவர் தலைவராகிவிட்டால், உடனே, இது மாதிரியான வேலைகளில் குதி்ப்பது வழக்கமாகிவிட்டது.

ஒருவர் அவரது வேலை எதுவோ அதை மட்டும் பார்க்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அரசியல்வாதிகளின் வேலையைச் செய்ய முயலக் கூடாது. அது போன்ற முயற்சிகளை ஆதரிக்கவும் முடியாது. ராம்தேவின் நடவடிக்கைகள் முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது.

அதே நேரத்தில் ஊழலுக்கு எதிராக இளைஞர்கள் கொதித்தெழ வேண்டும். இப்போது பொது வாழ்க்கையில் ஊழல் மலிந்துவிட்டது நிச்சயம் பெரும் கவலை தருகிறது என்றார்.

நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டதற்கு, சினிமாகாரனான நான் ஏன் அரசியலுக்கு வருவானா என்று கேட்கிறீர்கள். அரசியல்வாதிகளை சினிமாவுக்கு வரச் சொல்ல வேண்டியது தானே. எனக்கு அரசியல் புரிவதும் இல்லை, சரிப்படவும் செய்யாது. நான் ஒரு சுயநலக்காரன். என்னை ரசிகர்களும், நலம் விரும்பிகளும், பொது மக்களும் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்வதை ரசிப்பவன்.

நேர்மையானவர்கள் தான் எனக்கு குருக்கள். கிருஷ்ணர், துரோணாச்சாரியார், ஏன் ராவணன் ஆகியோர் தாங்கள் கொண்ட கொள்கையில் துளியும் நிலை மாறாமல் நின்றனர். அந்த அளவுக்கு மன பலம் அவர்களிடமிருந்தது ஆச்சரியமான விஷயம் என்றார்.

ஷாபானா ஆஸ்மி வரவேற்பு:

அதே நேரத்தில் ஊழலுக்கு எதிரான ராம்தேவின் போராட்டத்தை ஆதரிப்பதாக இந்தி நடிகை ஷாபானா ஆஸ்மி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X