பாலிவுட் போகும் ஷாம்!

இப்போது அகம் புறம், அந்தோணி யார் படங்களில் நடித்து வந்தாலும், நல்ல படங்களுக்கான தேடலைத் தொடர்ந்து கொண்டுள்ளார். இந்த நேரத்தில் பாலிவுட்டில் நடிக்கும் ஒரு பெரிய வாய்ப்பு அவருக்கு வந்துள்ளது.
பைசல் இயக்கும் இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், இந்தியில் உருவாகிறது. இரண்டிலும் ஷாம்தான் ஹீரோ. ஜாக்கி ஷெராப் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.
மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் இன்னும் முடிவாகவில்லை. விரைவில் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
இந்த இந்திப் பிரவேசமாவது அவருக்குக் கை கொடுக்குமா... பார்க்கலாம்!
Comments


Click it and Unblock the Notifications