சிம்புக்கு தீபாவளி இல்லை

By Staff

Simbu with Sana Khan
தீபாவளிப் பந்தயத்திலிருது விலகிவிட்டார் சிம்பு. இந்த தீபாவளிக்கு வருவதாக இருந்த அவரது சிலம்பாட்டம் படம், தீபாவளி முடிந்து ஒரு மாதத்துக்குப் பிறகுதான் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரிசையாக தோல்விப் படங்கள், தேவையற்ற வம்புகளில் சிக்கித் தவிக்கும் சிம்புவுக்கு இந்தப் படம் மிக முக்கியமானது. இதில் அவர் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயம்.

சிலம்பாட்டம் படத்தில் கோயில் அர்ச்சகராக நடித்துள்ளார் சிம்பு. அவருக்கு ஜோடியாக சனா கான், சினேகா உல்லல் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருந்தது லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்.

ஆனால் முக்கியமான இரு பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளதாம். இந்த நேரம் பார்த்து வைரஸ் காய்ச்சலில் சிம்பு பாதிக்கப்பட, படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் படம் தீபாவளி ரேஸிலிருந்து விலகிக் கொண்டுள்ளது.

இதுகுறித்து சிம்பு கூறுகையில், தீபாவளிக்கு நிறைய படங்கள் வரும். அவற்றோடு போட்டி போடும் அளவுக்கு படம் தரமாக வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அவசர கோலத்தில் இந்தப் படத்தைத் தர விரும்பவில்லை.

கொஞ்சம் பொறுத்திருந்து ஸோலோ ரிலீசாக இந்தப் படத்தை நவம்பரில் வெளியிடப் போகிறோம் என்றார்.

சிங்கம் சிங்கிளாதான் வருமாம்... கலக்கினா சரி...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X