தேர்தலுக்கு முன்பு வரும் விருத்தகிரி
நடிகர் விஜயகாந்த் இயக்கி உருவாக்கி வரும் விருத்தகிரி படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து விட்டதாம். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு படம் திரைக்கு வந்து விடுமாம்.
இதுவரை நடிகராக, தயாரிப்பாளராக மட்டும் இருந்து வந்த விஜயகாந்த் முதல் முறையாக இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருக்கும் படம்தான் விருத்தகிரி. அவரது மைத்துனர் சுதீஷ் தயாரிக்கிறார். வழக்கம் போல இப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் வருகிறார் விஜயகாந்த்.
படப்பிடிப்பை மலேசியா, தாய்லாந்து என வெளிநாடுகளிலும், ஹைதராபாத்திலும் முடித்துள்ள விருத்தகிரி படக் குழுவினர் தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளனர். இன்றும் 15 முதல் 20 நாள் படப்பிடிப்புதான் பாக்கி உள்ளதாம். அதை முடித்து விட்டால் படம் ரிலீஸுக்குத் தயாராகி விடுமாம்.
தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை இருப்பதால் அதற்குள் விருத்தகிரியை தியேட்டர்களுக்கு அனுப்பி விட வேண்டும் என கூறியுள்ளாராம் விஜயகாந்த்.


Click it and Unblock the Notifications











