ஏரோட்ராம் கட்டும் தல!

என்ன நடக்குது அங்கே..?
இங்குதான் தல அஜீத் தனக்கே தனக்கென குட்டி ஏரோட்ராம் ஒன்றை உருவாக்கி வருகிறாராம்.
மோட்டார் பைக் ரேஸ், கார் ரேஸ் என ரேஸ் பித்தராக இருந்த அஜீத், சில பல காரணங்களுக்காக அவற்றிலிருந்து தன்னை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொள்ள வேண்டி வந்தது. இப்போது யாருக்கும் தொந்தரவில்லாத, குட்டி விமான விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இப்போது அஜீத் வசம் இரு குட்டி விமானங்கள் உள்ளனவாம்.
இந்த விமானங்களை ரிமோட்டில் இயக்குவதுதான் தலயின் தலையாய பொழுதுபோக்கு. தவிர நிஜ விமானத்தை இயக்கவும் கூட இவருக்குத் தெரியுமாம். மனைவி ஷாலினிக்கும் இந்தக் குட்டி விமானங்களை இயக்குவதென்றால் கொள்ளைப் பிரியம்.
இத்தனை நாள் இந்த குட்டி விமானங்களை பெசன்ட் நகர் பீச்சில் இயக்கிக் கொண்டிருந்த அஜீத் இப்போது, இதற்காகவே தனி ஏர்போர்ட் ஒன்றை உருவாக்கி வருகிறார். படப்பிடிப்பு தவிர்த்த நேரத்தை இந்த ஏர்போர்ட்டில் விமானம் இயக்குவதில் கழிக்க ஆசையாம்.
விரைவில் தனக்காக ஒரு நவீன குட்டி விமானம் வாங்கி அதில் பறக்கவும் விருப்பம் உள்ளதாம்.
பணக்கார விளையாட்டு... பாத்து விளையாடுங்க தல!


Click it and Unblock the Notifications











