முருகதாஸை புகழ்ந்தால் பல்லை உடைப்பேன்- சிரஞ்சீவி மகனுக்கு பாலகிருஷ்ணா 'வார்னிங்'!
ஹைதராபாத்: இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸை தலையில் தூக்கி வைத்து பேசிய சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவின் பல்லை உடைப்பேன் என்று பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
ஏ. ஆர். முருகதாஸின் 7ஆம் அறிவு தெலுங்கில் செவன்த் சென்ஸ் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த விழா ஒன்று ஹைதராபாத்தில் நடந்தது. அதில் சிரஞ்சீவியின் மகனும், முன்னணி நடிகருமான ராம்சரண் தேஜா இயக்குனர் முருகதாஸை ஆஹா, ஓஹோ என்று தலையில் தூக்கி வைத்து பேசினார்.
முருகதாஸ் ஒரு திறமையானவர். அவரைப் போன்று திறமையான இயக்குனர் ஆந்திராவில் பிறக்காதது நமது துரதிர்ஷ்டம் என்று பேசினார். இதை கேட்ட பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்துவிட்டது.
இது குறித்து அவர் கூறியதாவது,
சினிமா வரலாறு பற்றி தெரியாமல் எதாவது பேசக்கூடாது. தெலுங்கு திரையுலகிலும் முருகதாஸ் போன்ற திறமையான இயக்குனர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர் இனியும் இது போல தெலுங்கு இயக்குனர்களை தரக்குறைவாகப் பேசினால் பல்லை உடைப்பேன் என்றார்.
என்ன சிரஞ்சீவி பாலகிருஷ்ணா இப்படி பேசியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, ராம்சரண் அந்த விழாவில் பேசியதன் முழு விவரம் எனக்கு தெரியாது. ஆனால் தெலுங்கு திரையுலகிலும் திறமையான இயக்குனர்கள் உள்ளனர் என்றார்.


Click it and Unblock the Notifications











