ரஜினியின் தீபாவளி சிறப்புப் பேட்டி!
பொதுவாகவே மீடியாவுக்கு பேட்டிகள் கொடுப்பதைத் தவிர்ப்பவர் ரஜினி. அவர் ஏதேனும் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும்போது, தன்னைச் சூழ்ந்து கொள்ளும் மீடியாக்காரர்களுக்கு போகிற போக்கில் சில விஷயங்களைச் சொல்வதோடு சரி.
தனிப்பட்ட முறையில் பேட்டி என்பது ஆண்டுக்கு ஒரு முறை கூட வந்ததில்லை. இன்னொன்று, தான் சொல்ல நினைப்பதை பல மேடைகளில் பேசி விடுவதாலும் கூட பேட்டிகள் தராமல் இருக்கக் கூடும்.
ரஜினியின் முழு நீளப் பேட்டி இல்லையே என்ற குறையைத் தீர்க்கும் வகையில், சன் டிவியில் தீபாவளி நாளான நவம்பர் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு அவரது சிறப்புப் பேட்டி ஒளிபரப்பாகிறது.
இதில் தனது இளமைக்கால நினைவுகள், கண்டக்டராக இருந்தபோது நடந்த சுவையான நிகழ்வுகள், எந்திரன் அனுபவங்கள் என பல விஷயங்களை அவர் பகிர்ந்து கொள்கிறார்.
இதே சன் டிவியில் வெள்ளிக்கிழமை மாலை மேக்கிங் ஆப் எந்திரன் நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகிறது.
தீபாவளியை குதூகலமாய் கொண்டாடுங்கள்!


Click it and Unblock the Notifications











