கருணாநிதிக்கு கமல் அழைப்பு!

அரசியல் தலைவர்களை அடிக்கடி சந்திப்பவரல்ல கமல். ஆனால் எப்போது சந்திக்க வேண்டுமோ, அப்போது கரெக்டாக சந்திப்பது அவரது ஸ்டைல். அந்த வகையில் முதல்வர் கருணாநிதியையும் அவ்வப்போது சந்திப்பது வழக்கம்.
அந்த வகையில் சனிக்கிழமை முதல்வரை சந்தித்தார் கமல்ஹாசன். அப்போது தசாவதாரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வருகை தர வேண்டும் என முதல்வருக்கு கமல்ஹாசன் அழைப்பு விடுத்தாராம்.
சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. இந்த சந்திப்பின்போது ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்க முதல்வரிடம் கமல் தேதி கேட்டாராம்.
தசாவதாரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஜாக்கி சான் கலந்து கொள்ளவுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு பேசப்பட்டது. கமலிடமே இதுகுறித்து கேட்டபோது, அப்படியா என்று ஆச்சரியம் தெரிவித்தார்.
இந்த நிலையில் முதல்வரிடம் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு கமல்ஹாசன் தேதி கேட்டுள்ளார்.
மேலும் தனது சந்திப்பின்போது தான் அடுத்து நடிக்கவுள்ள மர்மயோகி படம் குறித்தும் முதல்வரிடம் கமல் பேசினாராம். கமல்ஹாசன் நடிக்கவுள்ள மர்மயோகி, பல ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். நடித்த படம். தமிழில் முதன் முதலில் ஏ சான்றிதழ் வாங்கிய படம் என்ற பெருமையும் மர்மயோகிக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











