ரூ.60 லட்சம் சம்பள பாக்கி: தயாரிப்பாளர் மீது நடிகர் மாதவன் புகார்!

By Staff

Madhavan
தனக்கு ரூ.60 லட்சம் சம்பள பாக்கி வைத்து விட்டதாக 'அவன் அவள் அது' படத்தின் தயாரிப்பாளர் கவுரவ் சர்மா மீது நடிகர் மாதவன் தயாரிபபாளர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் மாதவன்தான் படம் வெளியாகத் தடையாக இருப்பதாக கவுரவ் சர்மாவும் சங்கத்தில் புகார் செய்துள்ளார்.

இந்தப் புகார்கள் தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்துகிறது தயாரிப்பாளர் சங்கம்.

பிரபல இந்திப் பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மாவின் இந்திப் படம் 'டார்லிங்'-கை, தமிழில் மாதவனை வைத்து 'அவன் அவள் அது' என்ற பெயரில் ரீமேக் செய்தார் இயக்குநர் கோனா வெங்கட். ராம்கோபால் வர்மாவின் உதவியாளர்தான் இவர்.

சதா, ஷமிதா ஷெட்டி நடித்த இந்த படம் முடியும் தறுவாயில் மாதவனு்ககும், தயாரிப்பாளருக்கும் சம்பள விவகாரத்தில் பிரச்சினை ஏற்பட, படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, எடுத்த வரைக்கும் போதும் என்று படத்தை வெளியிடும் வேலையில் இறங்கிவிட்டார்.

படத்தின் ஆடியோவையும் மாதவன் இல்லாமலேயே வெளியிட்டார்.

இதற்கிடையே, மாதவனால் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்பதற்காக, முன் கூட்டியே, தயாரிப்பாளர் சங்கத்தில் மாதவன் மீது புகார் செய்தார். மாதவனுக்கு பேசப்பட்ட சம்பளம் அதிகம் என்றும், அதை வெகுவாகக் குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆனால் படத்தின் டப்பிங் பேச மறுத்துவிட்ட மாதவன், இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

தனக்கு பேசப்பட்ட ரூ.75 லட்சம் சம்பளத்தில் ரூ.15 லட்சம் மட்டுமே தரப்பட்டுள்ளதாகவும், பாக்கி ரூ.60 லட்சத்தை கவுரவ் சர்மா கொடுக்க வேண்டும் என்றும் மாதவன் தனது புகாரில் கூறியுள்ளார்.

இந்தப் புகார் தொடர்பாக மாதவன் மற்றும் கவுரவ் சர்மா இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறது தயாரிப்பாளர் சங்கம். நேற்று நடத்தப்பட்ட பேச்சில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இன்றும் பஞ்சாயத்து தொடர்கிறது!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X