காயத்ரிக்கு ரஜினி வாழ்த்து

புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட ரஜினி, பின்னர் படித்துப் பார்ப்பதாகத் தெரிவித்தார். மேலும் தமிழில் இந்தப் புத்தகம் வெளி வந்ததில் மிகவும் மகிழ்ச்சி என்றார்.
புத்தக வெளியீட்டு விழா மற்றும் தமிழ்ப் புத்தகம் எழுதப்பட்ட விதம் குறித்து காயத்ரியிடம் கேட்ட ரஜினி, இந்தப் புத்தகம் தமிழில் வந்திருப்பதுதான் சிறப்பு என்றார்.
ரஜினி வாழ்க்கை வரலாறு ஆங்கிலப் பதிப்பு செய்த சாதனையை இந்த தமிழ்ப் பதிப்பும் நிகழ்த்தட்டும் என வாழ்த்தினார் ரஜினி.
இயக்குநர் எஸ்பி முத்துராமன், காயத்ரியின் கணவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் உடனிருந்தனர்.
Comments


Click it and Unblock the Notifications