திருப்பதியில் ரஜினி குடும்பம்-பேரனுக்கு மொட்டை

இமயமலைப் பயணம் மேற்கொண்டிருந்த ரஜினி நேற்று காலை சென்னை திரும்பினார்.
நேற்று மாலை ரஜினி காந்த், தனது மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா, மருமகன் நடிகர் தனுஷ், பேரன் யாத்ரா, இளைய மகள் செளந்தர்யா மற்றும் உறவினர்கள் சிலரோடு சென்னையிலிருந்து கார் மூலம் திருப்பதிக்கு வந்தார்.
பின்னர் மொட்டை போடும் இடத்திற்கு ரஜினி குடும்பத்தினர் சென்றனர். அங்கு ரஜினியின் பேரனுக்கு மொட்டை போட்டு நேர்த்திக் கடன் செலுத்தப்பட்டது.
பின்னர் தரிசன இடைவேளையின்போது, வைகுண்ட வரிசை வளாகம் வழியாக கோவிலுக்குள் ரஜினி குடும்பத்தினர் சென்றனர். அங்கு குடும்பத்தினருடன் ரஜினி பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.
Comments


Click it and Unblock the Notifications