கே.வி.ஆனந்த்துடன் லடாய்... 'கோ' படத்திலிருந்து வெளியேறினார் சிம்பு!

நடிகர் சிம்பு தனது 26வது பிறந்தநாளை நேற்று கோலாகலமாகக் கொண்டாடினார்.
சென்னை தேவர் திருமண மண்டபத்தில் நடந்த இந்த விழாவில் பெரிய சைஸ் கேக் கொண்டு வரப்பட்டது. இந்த கேக்கை வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடிய சிம்பு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோ படத்திலிருந்து தான் விலகி விட்டதாக அறிவித்தார்.
கோ படத்தை கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் ஆரம்பத்திலிருந்தே சிம்புவுக்கும் கேவி ஆனந்துக்கும் பிரச்சினை நிலவியதாம்.
இந்தப் படத்தின் ஸ்கிரிப்டில் சில திருத்தங்கள் வேண்டும் என சிம்பு கேட்டாராம். மேலும் படத்தின் நாயகி கார்த்திகாவுக்கு பதில் இன்னொரு நடிகையை சிபாரிசு செய்தாராம் சிம்பு.
இரண்டு விஷயங்களையுமே மறுத்துவிட்ட கே வி ஆனந்த், தான் ஏற்கெனவே முடிவு செய்த கதை, நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களுடன் சீனாவில் படப்பிடிப்பு நடத்தக் கிளம்பிவிட்டார். அவர்களுடன் போயிருக்க வேண்டிய சிம்பு இங்கேயே தங்கிவிட்டார்.
இதுகுறித்துக் கூறுகையில், "கோ படத்தில் நான் நடிக்கவில்லை. விலகிக் கொண்டேன். சில விஷயங்கள் எனக்கு ஒத்து வரவில்லை. போட்டோ ஷூட் கூட நடந்தது. ஆனால் ஆரம்பத்திலிருந்தே எங்களுக்கு ஒத்துப் போகவில்லை. எங்களை இணைக்க முயற்சி மேற்கொண்ட கல்பாத்தி அகோரம் அவர்களுக்கு நன்றி.
இப்போது நான் விண்ணைத் தாண்டி வருவாயா பட வெளியீட்டுக்காக காத்திருக்கிறேன். இந்தப் படம் முடிந்ததும் லிங்குசாமி மற்றும் வெங்கட் பிரபு படங்களில் நடிப்பேன்..." என்றார்.


Click it and Unblock the Notifications











