பரிசே தராத ஷாருக் மனைவி

ஷாருக் கானின் தோழி ஃபாரா கான் நடத்தி வரும் டிவி ஷோ தேரே மேரே பீச் மெய்ன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஷாருக் கான் மனம் விட்டுப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், நானும், கெளரியும் முதன் முதலில் சந்தித்துக் கொண்டு 24 வருடங்களாகி விட்டன. இந்த 24 ஆண்டு கால காதல் வாழ்க்கையில் எனக்கு ஒரு பரிசு கூட அவர் தந்ததில்லை.
இதற்கு அவர் கூறும் காரணம் - நான் உள்பட எல்லாமே உங்களுக்குக் கிடைத்து விட்டது. பிறகு தனியாக என்ன பரிசு தருவது என்பதுதான். எப்படிப்பட்ட சமாளிப்பு பாருங்கள்.
அவர் மட்டுமல்ல, நான் பரிசு தந்தால் கூட அதை அவர் ஏற்க மாட்டார் என்றார் ஷாருக் கான்.
ஏராளமான தேசிய, சர்வதேச விருதுகள், 14 பிலிம் பேர் விருதுகளைக் குவித்து வைத்துள்ளார் ஷாருக் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
ஃபாரா கான் கெளரி தேரே மேரே பீச் மெய்ன் பரிசு ஷாருக் கான் farah khan gauri gifts sharukh khan tere mere beach mein


Click it and Unblock the Notifications