ஷாரூக்கானுக்கு நிலவில் நிலம் வாங்கிய ரசிகை!

Shahrukh Khan
நம்பினால் நம்புங்க... ஷாரூக்கான் பெயரில் நிலவில் பல ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது!

எல்லாம் ஷாரூக்கானின் ஆஸ்திரேலிய பெண் ரசிகர் ஒருவர் செய்த வேலை. ஷாரூக்கின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் நிலவில் நிலம் வாங்கி அதைப் பத்திரப் பதிவு செய்து அனுப்பி வைப்பது இந்த பெண்ணின் வழக்கமாம். அதற்காக இது ஏதோ செல்லாத விஷயமாக இருக்குமோ சந்தேகப்பட வேண்டாம். அமரிக்காவின் லூனார் ரிபப்ளிக் சொஸைட்டி மூலம் பதிவு செய்யப்பட்டு இந்தப் பத்திரங்கள் ஷாரூக்கானுக்கு வழங்கப்பட்டுள்ளனவாம்.

இதுகுறித்து ஷாரூக்கானிடம் விசாரித்த போது, "உண்மைதான். இந்த ரசிகை ஆண்டு தோறும் நிலவில் இடம் வாங்கி என் பிறந்த நாளுக்குப் பரிசாகத் தருகிறார். பல ஏக்கர் நிலத்தை எனக்கு அவர் வாங்கி அனுப்பியுள்ளார். உலகம் முழுக்க என்னை நேசிக்கும் இதுபோன்ற ரசிகர்களைப் பெற்றது எனது அதிர்ஷ்டம்தான்" என்கிறார் ஷாரூக்.

சரி இந்த நிலத்தை என்ன செய்யப் போகிறார் ஷாரூக்...?

"எதிர்காலத்தில் எல்லோரும் இங்கு குடியேறும் நிலை வந்தால், நானும் குடியேறிவிடுவேன்", என்கிறார் ஷாரூக் சிரித்தபடியே.

நிலவில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாமா?

யாரும் வாங்கலாமாம். ஒரு ஏக்கர் (அதாவது 43560 சதுர அடி) விலை 37 டாலர் (ரூ 1758.75) மட்டுமே. ஒருவர் 40 ஏக்கர் வரை நிலம் வாங்கிக் கொள்ளலாம் நிலவில்.

நிலம் வாங்கும் போதே, அந்த இடத்தின் ஸாட்டிலைட் படம், பத்திரம், நிலவில் அந்த நிலம் அமைந்துள்ள இடம், மூன் அட்லாஸ் என அனைத்தையும் கொடுத்து விடுகிறார்களாம்.

பின்னர் ஆண்டு தோறும் வெளியாகும் நிலவின் நில உரிமையாளர் பட்டியலில் இடம் வாங்கியவர் பெயரும் இடம் பெறும்.

நிலவில் நமக்கு இடம் உள்ளதே என்று, அந்த இடத்தில் நாசாவின் விண்கலமோ அல்லது சந்திரயானோ இறங்கக் கூடாது என்று யாரும் லா பாயிண்ட் பேசக்கூடாது! காரணம், இந்த ஆய்வுகளுக்கு கட்டுப்பாடு இல்லை!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X