சிங்கம் போய் வில்!

பிரபுதேவாவும், விஜய்யும் இணைந்து கொடுத்த போக்கிரி சூப்பர் ஹிட் ஆனது. ஆனால் அதன் பின்னர் வெளியான விஜய்யின் படங்கள் பெரிய அளவில் ரிசல்ட் காட்டவில்லை.
இந்த நிலையில் பிரபு தேவாவுடன் மீண்டும் இணைகிறார் விஜய். இப்படத்திற்கு முதலில் சிங்கம் என பெயரிட்டிருந்தார் பிரபுதேவா. ஆனால் இதே டைட்டிலை இயக்குநர் ஹரி ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்தார்.
இதையடுத்து டைட்டிலை மாற்ற தீர்மானிக்கப்பட்டது. இப்போது வில் என பெயரிட்டுள்ளனராம். இந்த டைட்டில் விஜய்க்கும், பிரபு தேவாவுக்கும் பிடித்துப் போய் விட்டதாம்.
ஆனால் இங்கும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. இதே பெயரில், எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்க, நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. உடல் ஊனமுற்ற, புத்திசாலியான இளைஞர் வேடத்தில் சூர்யா நடிக்கிறார்.
தற்போது பைனான்ஸ் பிரச்சினை காரணமாக படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய் படத்துக்கு வில் என பெயரிடப்பட்டுள்ளது குறித்து எஸ்.ஜே.சூர்யா தரப்பிலிருந்து எந்த தகவலும் இல்ைல.
வில் படத்தை அய்ங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. பழனி அருகே ஜூன் 7ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறதாம்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயனதாரா மற்றும் பிரகாஷ் ராஜ், பிஜூ மேனன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
குருவி படத்தில் இடம் பெறாமல் போன வடிவேலு, வில் படத்தில் பெரும் தொகைக்கு புக் ஆகியுள்ளாராம். வடிவேலுவை கண்டிப்பாக படத்தில் சேர்க்க வேண்டும் என்று விஜய்யே, பிரபுதேவாவிடம் கூறி விட்டாராம். தொடர்ந்து இரு படங்கள் சறுக்கி விட்டதால் இந்த முடிவுக்கு வந்துள்ளாராம் விஜய். அந்த இரு படங்களிலும் வடிவேலு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரவிவர்மன் கேமராவைக் கையாளுகிறார். சுனில் கலையைப் பார்க்கிறார். ஸ்ரீதேவி பிரசாத் இசையமைக்கிறார்.


Click it and Unblock the Notifications











