கொடி 'பிடிக்கும்' விஜய்!

தனது ரசிகர் மன்றத்துக்கென தனியாக ஒரு கொடியை உருவாக்குமாறு உத்தரவிட்டுள்ள விஜய், கொடி எப்படி இருக்க வேண்டும் எனவும் ஆலோசனை கூறியுள்ளாராம். விரைவில் விஜய் ரசிகர் மன்றத்துக்குக் கொடி கிடைத்து விடும்.
அவருக்கு நெருக்கமான சிலர்தான் இந்த கொடி டிசைனிங்கில் தீவிரமாக இறங்கியுள்ளனராம். சென்னையில் விஜய் நடத்திய இலவச திருமண நிகழ்ச்சியின்போது இந்த தகவலைக் கூறினார்.
மேலும், மாவட்டந்தோறும் ஒரு கல்யாண மண்டபம் கட்டப் போகிறாராம் விஜய். அங்கு ஏழைகளுக்கு இலவசத் திருமணம் நடத்த மண்டபம் வழங்கப்படுமாம். மேலும் அந்த மண்டபங்கள் அந்தந்த மாவட்ட ரசிகர் மன்றத் தலைமை அலுவலகங்களாகவும் செயல்படுமாம்.
முதலில் மன்றம், பிறகு கொடி, அப்புறம் அதிரடி என்பதுதான் சமீப காலத்திய அரசியல் நடிகர்களின் வழக்கமாக உள்ளது. முதலில் விஜயகாந்த், பிறகு சரத்குமார், அடுத்து விஜய்?
Comments


Click it and Unblock the Notifications