எங்க வீட்டுப் பிள்ளை ஸ்டார்ட்!

By Staff

Enga Veettu Pillai movie launch
தென்னிந்தியாவின் புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான விஜயா - வாஹினி நிறுவனம் மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளது. தனது 60வது ஆண்டையொட்டி எங்க வீட்டுப் பிள்ளை என்ற புகழ் பெற்ற பெயரில் புதிய படத்தைத் தயாரிக்கிறது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க படம் எங்க வீட்டுப் பிள்ளை. அப்படம் எம்.ஜி.ஆர். ரசிகர்களின் என்றென்றும் மறக்க முடியாத விருந்து.

இப்போது அதே பெயரில் பரத்தை வைத்து புதிய படத்தை தயாரிக்கிறது விஜயா வாஹினி.

1965ம் ஆண்டு விஜயா - வாஹினியின் நிறுவனரான பி.நாகி ரெட்டிதான், எம்.ஜி.ஆரை வைத்து எங்க வீட்டுப் பிள்ளைப் படத்தைத் தயாரித்தார். தற்போது அதே பெயரை மட்டும் எடுத்துக் கொண்டு வேறு கதையை படமாக்கவுள்ளனர்.

பரத் நாயகனாக நடிக்க, பிரபு, விவேக், சம்பத் ராஜ், லிவிங்ஸ்டன், பிரகதி, ஆரத்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இது தவிர இரு புதுமுகங்களும் படத்தில் இருக்கிறார்களாம்.

இப்படத்தை இயக்கவிருப்பது பத்ரி. இவர் ஏற்கனவே சுந்தர்.சியை வைத்து வீராப்பு படத்தைக் கொடுத்தவர். ஐந்தாம்படை படத்தையும் இவர்தான் இயக்கியுள்ளார்.

காமெடி, சஸ்பென்ஸ் கலந்த வித்தியாசமான டிராமாவாக இது இருக்கும் என்கிறார் பத்ரி.

பாரிஜாதம் படப் புகழ் தரண் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி ஹைதராபாத், கொடைக்கானல், மலேசியா, சிங்கப்பூர் என வளரவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X