அஜீத் மகளுக்கு ஒரு வயசு!

அஜீத், ஷாலினிக்கு கடந்த ஆண்டு அழகிய மகள் பிறந்தாள். ஷாலினிக்குப் பிரசவம் நடந்தபோது பொறுப்பான கணவராக, அஜீத்தும் உடன் இருந்தார்.
அழகிய மகளைப் பெற்றெடுத்த ஷாலினியும், தந்தையான பூரிப்பில் அஜீத்தும் மகள் மீது பாசத்தைப் பொழிந்து வளர்த்து வருகின்றனர். அஜீத், ஷாலினி தம்பதியின் மகளுக்கு அனுஷ்கா என பெயரிடப்பட்டது.
அனுஷ்காவின் முதலாவது பிறந்த நாளை அஜீத் தம்பதியினர் தங்களது குடும்பத்தினருடன் கொண்டாடினர்.
இந்த கொண்டாட்டத்தில் அஜீத் குடும்பத்தினர், ஷாலினி குடும்பத்தினர், மிக மிக நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனராம்.
குட்டிப் பாப்பாவை நாமும் வாழ்த்துவோம்...


Click it and Unblock the Notifications











