திடீர் நெஞ்சுவலி... நடிகர் விஜயகுமார் மருத்துவமனையில் அனுமதி!

By Chakra

Vijayakumar
சென்னை: திடீர் நெஞ்சுவலி காரணமாக நடிகர் விஜயகுமார் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல நடிகர் விஜயகுமாருக்கும் அவர் மகளும் நடிகையுமான வனிதாவுக்கும் பெரும் சண்டை நடந்து வருகிறது. இவர்களின் குடும்பச்சண்டைதான் இன்று மீடியாவில் பிரதான செய்தியாகத் திகழ்கிறது.

விஜயகுமாரும், வனிதாவும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி போலீசில் புகார் கொடுத்து வருகின்றனர்.

விஜயகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் வனிதாவின் இரண்டாவது கணவர் ஆனந்த ராஜ் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடப்பட்டுள்ளார். வனிதா கொடுத்த புகாரின்பேரில் விஜயகுமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதில் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது அவருக்கு.

இந்த நிலையில், விஜயகுமாருக்கு இன்று திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. போரூர் அருகே ஆலப்பாக்கத்தில் உள்ளது விஜயகுமார் வீடு. உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு சொல்லப்பட்டது. வீட்டிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X