நிர்வாணக் காட்சி...அதிர்ந்து போன ரவி!

பின்னே... சாக்லெட் பாயாக கலக்கிக் கொண்டிருந்தவரை, காட்டுக்குக் கூட்டிப் போய் கிட்டத்தட்ட நிர்வாணமாக நடிக்கச் சொன்னால் எப்படியிருக்கும்?
இப்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் பேராண்மை படத்துக்காகத்தான் அப்படியொரு 'மகா ரிஸ்க்' எடுக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஜனநாதன்.
இந்தப் படத்துக்காக ரவியை ஒப்பந்தம் செய்தபோது, படத்தின் ஒருவரிக் கதையை மட்டும்தான் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஜனநாதன். அதுவே மிகவும் சுவாரஸ்யமாக இருந்த்தால் மீதிக் கதையைக் கூடக் கேட்காமல் ஒப்புக் கொண்டாராம் ரவி (மீதிக் கதையைக் கேட்டாலும் சொல்கிற ரகமில்லை இந்த இயக்குநர்!).
இப்போது முள்ளுக்காடு எனும் வனப் பகுதியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஏராளமான மும்பை மாடல்கள் மற்றும் பொது மக்கள் குழுமியிருக்க, திடீரென்று வந்த இயக்குநர் ஜனநாதன், அடுத்த காட்சியில் கிட்டத்தட்ட நீங்க நிர்வாணமாத்தான் நடிக்கணும் என ரவியிடம் கூறிவிட்டாராம்.
அதிர்ந்துபோன ஜெயம் ரவி முதலில் மறுத்துவிட, இயக்குநர் தன் பிடிவாதத்தைத் தளர்த்திக் கொள்ளவே இல்லையாம். தனது அண்ணனுக்கும் தந்தைக்கும் செல்போனில் தகவல் சொல்ல, அவர்களின் கோரிக்கைக்கும் ஜனநாதன் இறங்கி வரவில்லையாம்.
வேறு வழியின்றி கூடியிருந்த கூட்டத்தைக் கலைக்கச் சொல்லி, அவர்கள் அனைவரும் போன பிறகுதான் அந்தக் காட்சியில் நடித்தாராம் ரவி.
இந்தக் காட்சியை நினைத்து மிகவும் வருந்திய ஜெயம் ரவி ஒரு நாள் முழுக்க சாப்பிடாமலேயே பட்டினி கிடந்தாராம். கடைசியில் அவரது அப்பா மோகன் சமாதானப்படுத்தி சாப்பிட வைத்தாராம்.
வருத்தப்படாதீங்க... கோவணத்தோட நடிச்ச கமலால்தான் உலக நாயகனாக ஜொலிக்க முடிந்தது!


Click it and Unblock the Notifications











