ஜல்லிக்கட்டு: தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ரித்தீஷ் அப்பீல்!

'தமிழர் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம்' என்ற அமைப்பின் தலைவராக உள்ளார், கானல் நீர், நாயகன் படங்களில் நடித்துள்ள நடிகர் ஜே.கே.ரித்தீஷ்குமார்.
இவர் சென்னையில் நேற்று நிருபர்களைச் சந்தித்தார்:
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு 1,200 கிராமங்களில் நடைபெறுகின்றன. 67 ஆயிரம் பேர் எங்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார்கள்.
இந்த வருடம் இதுவரை, 200 ஊர்களில் ஜல்லிக்கட்டு நடந்துள்ளது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது.
ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டுகளுக்கு ஒரு சான்று. எனவே அதை நடத்தியே தீருவோம். இந்த விளையாட்டை நம்பி பல குடும்பங்கள் உள்ளன. எனவே, சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்துள்ளேன், என்றார் ரித்தீஷ்.
பின்னர், ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்கள் 10 பேருக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை நடிகர் ரித்தீஷ் நிதி உதவி அளித்தார்.


Click it and Unblock the Notifications











