மாதவனின் 'ஆனந்த புன்னகை'!

By Staff

Madhavan
மின்னலே மாதிரி ஒரு ஹிட்டுக்காகக் காத்திருக்கும் மாதவனுக்கு கிடைப்பதெல்லாம் மொழிமாற்றுப் படங்களாகத்தான் இருக்கின்றன.

மலையாளத்தில் மாதவன் நடித்துள்ள மேட் இன் யூஎஸ்ஏ படம் ஆனந்தப் புன்னகை எனும் தலைப்பில் தமிழுக்கு வருகிறது.

முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடந்த இதன் படப்பிடிப்பு சமீபத்தில்தான் முடிந்தது.

படத்தின் கதை சிம்பிள். வேலைக்காக அமெரிக்கா செல்லும் மாதவன், தானும் நண்பர்களும் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் பாபு ஆண்டனியிடம் கொடுத்து வைக்கிறார். இந்தியாவிற்கு வந்து கொடுத்த பணத்தை கேட்க நினைத்தால் பாபு ஆண்டனி சுடப்பட்டு இறந்து போயிருக்கிறார்.

பாபு ஆண்டனி அந்தப் பணத்தை எங்கு வைத்திருக்கிறார் என்று தெரியாமல் தவிக்கும் மாதவன் இறுதியில் அந்தப் பிரச்சினையிலிருந்து எப்படி மீண்டு வருகிறார், அவரது முகத்தில் ஆனந்த புன்னகை பூத்ததா? என்பதுதான் கதையாம்.

'கதையை விட அதற்கு இயக்குநர் கொடுத்திருந்த ட்ரீட்மெண்ட் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதனால்தான் உடனடியாக ஒப்புக் கொண்டேன்.

இப்போதைக்கு நான் நடித்துள்ள அவன் அவள் அது படத்தை என் விருப்பத்துக்கு மாறாக தமிழில் வெளியிடும் வேலைகளில் இறங்கியுள்ளனர். நியாயம்னு ஒண்ணு இருந்தா, எனக்கு வரவேண்டியது வராமப் போகாது, என்றார் மாதவன்.

அவன் அவள் அது படத்துக்காக மாதவனுக்கு தயாரிப்பாளர் தரவேண்டிய பாக்கித் தொகை 80 லட்சம்!

'லேடி' பாவம் மட்டுமல்ல, 'மேடி' பாவமும் கூட பொல்லாததுங்கோ!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X