சிம்பு- நயன் ஒரு ஜில் சந்திப்பு!

சிம்பு-நயன்தாரா மறுபடியும் பார்க் ஓட்டலில் சந்தித்தார்கள். சிறிது நேரம் தங்கள் கேரியர் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்!!
கிசுகிசுவல்ல... அப்பட்டமான உண்மை! நடந்தது இதுதான்...
அடிபட்ட கால் சரியானதும், நேற்று இரவு விமானத்தில் வெளியூருக்குப் புறப்பட்டிருக்கிறார் சிம்பு. ஆனால் விமானம் பல மணி நேரம் தாமதமாகக் கிளம்பும் சூழ்நிலை. உடனே அந்த விமான நிறுவனம் பார்க் ஓட்டலில் அறைகளைப் பதிவு செய்து கொடுத்திருக்கிறது அதில் பயணித்தவர்களுக்கு.
தன் அறைக்கு சென்று கொண்டிருந்தபோது வழியில் நயன்தாராவும் விஷாலும் ஜோடியாக வந்திருக்கிறார்கள். நேருக்கு நேர் நயன்தாராவைப் பார்த்த சிம்பு, உடனே அவரை நிறுத்திப் பேசியிருக்கிறார். உடனே நிலைமையைப் புரிந்து கொண்டு சற்று தள்ளி நின்றுகொண்டாராம் விஷால் (சிம்பு எந்த மூடிலிருப்பாரோ... எதற்கு வம்பு என்றுதான்!).
நயனும் சிம்புவும் சில நிமிடங்கள் ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்தார்களாம். பின்னர் நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் சூட்டிங் பற்றியெல்லாம் தகவல்கள் பகிர்ந்து கொண்டார்களாம். முக்கியமாக நயனின் புதிய செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டாராம் சிம்பு.
அது சரி... அவங்களுக்குள்ள நடந்தது உங்களுக்கு எப்படித் தெரியும்னு கேக்கறீங்களா...
சொன்னதே சிம்புதானே!!
சினிமாவுல இதெல்லாம் சாதாரணமப்பா...


Click it and Unblock the Notifications











