வேண்டாம் பட்டப் பெயர்! - பலே ஜீவா

By Chakra

எனக்கு பட்டப்பெயரும் வேணாம், வெற்றுப் புகழ்ச்சியும் வேணாம். நடிப்பு மூலம் பெயர் கிடைச்சாலே போதும், என்கிறார் நடிகர் ஜீவா.

கோ படத்தில் நடிக்கும் ஜீவா, சமீபத்தில் அளித்த பேட்டி:

கச்சேரி ஆரம்பம் படத்துக்குப் பிறகு இன்னும் நிதானமாக கதைகளை ஒப்புக் கொள்கிறேன்.

சிங்கம் புலி, கோ, ரவுத்திரம். வந்தான் வென்றான் படங்களில் நடிக்கிறேன். கோ படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. இதில் முன்னாள் கதாநாயகி ராதா மகள் கார்த்திகா ஜோடியாக நடிக்கிறார்.

இந்த படத்துக்கான படப்பிடிப்பு நார்வேயில் சமீபத்தில் நடந்த போது பனிப்பொழிவில் மலை உச்சியில் பல மணி நேரம் சிக்கி உயிருக்கு போராடினோம். ஆபத்தான பள்ளத்தாக்கு ஓரத்தில் நடன காட்சியை எடுத்தனர். எனக்கு தலை சுற்றியது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம்.

ரவுத்திரம் படம் சீரியஸ் ஆன கதை. சத்யா படத்தில் கமல் சாருக்கு அமைந்தது போன்ற ஒரு கேரக்டர்.

சூப்பர் குட் பிலிம்ஸ் எடுத்த புது வசந்தம் படத்தை ரீமேக் செய்து நடிக்க ஆசை. இந்த படத்தில் ஆர்யாவிடமும் நடிக்க கேட்டால் வருவார்.

தமிழில் தயாராகும் இந்தி 3 இடியட்ஸ் படத்தில் நடிக்க இயக்குனர் ஷங்கர் என்னை அழைத்து பேசினார். எனக்கும் அந்த படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளது.

நடிகர்களுக்கு பட்டப்பெயர் தேவை இல்லை. எனக்கு மதுரையில் நடந்த விழாவில் இளைய கலையரசன் என்ற பட்டம் கொடுத்தனர். அதை நான் பயன்படுத்துவது இல்லை. என் ஒரிஜினல் பெயரை விட வேறு பட்டங்கள் பெரிதானவை அல்ல. அதே போல என் நடிப்பு மூலம் பெயர் கிடைத்தாலே போதும்.." என்றார்.

அட!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X