படிக்காதவன் ஷூட்டிங் ஆரம்பம்

By Staff

Dhanush in Padikathavan
தனுஷ் அடுத்து நடிக்கும் படிக்காதவன் படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

பொல்லாதவனைத் தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள படம் யாரடி நீ மோகினி. இன்று திரைக்கு வந்துள்ளது. கூட நடித்திருப்பவர் நயனதாரா.

இந்த நிலையில் தனது அடுத்த படத்திற்கான ஷூட்டிங்கில் பிசியாகி விட்டார் தனுஷ். சென்னை ஸ்டுடியோக்களில் படபிப்பிடிப்பு முறைப்படி தொடங்கியுள்ளது.

தனுஷுக்கு ஜோடியாக முதல் முறையாக உதட்டழகி தமன்னா நடிக்கிறார். சூரஜ் படத்தை இயக்குகிறார். விஜயா வாஹினி புரடக்ஷன்ஸ் படத்தைத் தயாரிக்கிறது.

ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படம் தான் படிக்காதவன். அந்த டைட்டிலை ஒரிஜினல் தயாரிப்பாளர் ஈஸ்வரி பிலிம்ஸ் வீராசாமியிடம் பேசி வாங்கியுள்ளனர். ரஜினி இதற்கு உதவியதாக தெரிகிறது.

படிக்காத இளைஞன் எப்படி வாழ்க்கையில் உயர்ந்து பெரிய 'தொழில் காந்தமாக' மாறுகிறான் என்பதுதான் கதையாம். தனுஷுக்கு ஏற்ற கதை இது என்பதால் படம் சூப்பர் ஹிட் என்று இப்போதே பேச ஆரம்பித்து விட்டனர்.

படம் குறித்து தனுஷ் கூறுகையில், சூரஜின் ஸ்கிரிப்ட் அத்தனை சமாச்சாரங்களும் நிரம்பியுள்ளது. எனவே படம் சூப்பர் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரிஜினல் படிக்காதவனின் பெயரை எனது படிக்காதவன் கெடுக்காது என்ற நம்பிக்கையும் உள்ளது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X