பிரபுதேவா, பிரமாதம்யா!

கடந்த 28ம் தேதி விஜய் டிவியின் உலக நாயகன் கமல்ஹாசன் பொன் விழாக் கொண்டாட்டம் நடந்தபோதுதான் இந்த அதிசயமும் நடந்துள்ளது.
அன்றைய தினம் நயனதாராவுடன் விழா மேடைக்கு பிரபு தேவா வருவார் என எதிர்பார்ப்பு நிலவியது. நயனதாராவும், பிரபுதேவாவுடன் நிகழ்ச்சிக்கு வரப் போவதாக சில பத்திரிக்கையாளர்களுக்குத் தெரிவித்திருந்ததால் மீடியாக்காரர்கள் குவிந்திருந்தனர்.
ஆனால் இருவருமே வரவில்லை. ஆனால் இரவு 9 மணிக்கு மேல்தான், அதாவது கிட்டத்தட்ட நிகழ்ச்சி முடிவடையப் போகும் நேரத்தில்தான் பிரபுதேவா வந்தார். அவர் மட்டும் தனியாக வந்தார். மீடியாக்காரர்களை சந்திக்காமல் டபாய்த்து விட்டு உள்ளே போய் விட்டார்.
அதற்கு முதல் நாள் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்த பிரபுதேவா நேராக அண்ணா நகரில் உள்ள தனது வீட்டுக்குப் போய் விட்டார். அன்றைய இரவை அங்கேயே கழித்தாராம். கணவரின் வருகைக்காக காத்திருந்த ரமலத்தும் கண்ணீர் மல்க சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மீண்டும் கணவர் வீடு திரும்பியதால் ரமலத் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாராம். மேலும் தனக்குப் போன் செய்த சில பத்திரிக்கையாளர்களிடம் இப்போதைக்கு இதுகுறித்துப் பேச எதுவும் இல்லை என்றும் கூறி விட்டாராம்.
மாற்றம், நிரந்தரமாகட்டும்.


Click it and Unblock the Notifications











