பெரும் சிக்கலில் வேட்டைக்காரன்!

Vettaikaaran
கிட்டத்தட்ட வேட்டைக்காரன் மீதிருந்த நம்பிக்கை விஜய்க்கு போயே போய்விட்டிருக்கும்... காரணம் அந்தப் படத்துக்கு வரும் சோதனைகள் அப்படி.

இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் படத்தை வாங்கிய சன் பிக்ஸர்ஸ் பொங்கலுக்குப் பார்த்துக் கொள்ளலாம் என கிடப்பில் போட்டுவிட்டது. ஆனால் இதற்குப் பிறகு வாங்கிய கண்டேன் காதலை படத்தை போன வாரம் வெளியிட்டது.

பொங்கலுக்கு நிச்சயம் என விஜய் தரப்பு நம்பிக்கையுடனிருந்த நிலையில், இந்தப் படத்தை இப்போதே சென்சாருக்கு அனுப்பியுள்ளனர். யுஏ சான்றும் பெற்றுள்ளனர்.

பொங்கலுக்கு குறைந்தது இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் படத்துக்கு இப்போதே சென்சார் சான்றிதழ் பெற்றிருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படியெனில் இந்தப் படம் கிறிஸ்துவமஸ் அல்லது அதற்கும் முன்பே ரிலீசாகப் போகிறதா? அல்லது தயாரிப்பாளர் சங்க விதிகளை மீறி, சாதாரண நாளில் வெளியிடப் போகிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், வேட்டைக்காரன் படத்தின் சில காட்சிகள் சன் பிக்ஸர்ஸ் தரப்புக்கு பிடிக்கவில்லை என்றும், இந்தக் காட்சிகள் ரீ ஷூட் செய்யப்பட்டால் தவிர படத்தை வெளியிடுவது சாத்தியமில்லை என்றும் விஜய்க்கும், படக்குழுவினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். ஆனால் விஜய்யோ இப்போது சுறா ஷூட்டிங்கில் மும்முரமாக உள்ளார். அதை முடித்துவிட்டு வந்தால்தான் மறு படப்பிடிப்பு சாத்தியமாகும்.

கைபிசைந்து நிற்கிறது வேட்டைக்காரன் யூனிட்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X