சிம்புவுக்குப் பதில் விஜய்!

க்ளவுட் நைன் மூவீஸ் தயாரிக்கும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகிறது. தெலுங்கில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கிறார்.
இந்தப் படத்துக்காக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட சிம்புவுக்கும் இயக்குநர் லிங்குசாமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் மாற்றி மாற்றி தாக்கி அறிக்கை வெளியிட்டது நினைவிருக்கலாம்.
இதைத் தொடர்ந்து ஏற்கெனவே தனக்கு விஜய் கொடுத்திருந்த கால்ஷீட்டை இந்தப் படத்துக்காக பயன்படுத்திக் கொண்டார் லிங்குசாமி.
தற்போதைய நிலவரப்படி 5 படங்களில் நடிக்கிறார் விஜய். அவை: சித்திக் இயக்கத்தில் காவல் காதல், ராஜா இயக்கத்தில் வேலாயுதம், சீமான் இயக்கத்தில் பகலவன், ஷங்கர் இயக்கத்தில் 3 இடியட்ஸ் மற்றும் லிங்குசாமி படம்.
Comments


Click it and Unblock the Notifications