twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'சோல்ஜர்' விஜய்!

    By Staff
    |

    vijay with Nayanatara
    குருவி சற்றே ஏமாற்றம் தந்துள்ளதால் அப்செட் ஆகியுள்ள விஜய், அடுத்து இந்தி ரீமேக் ஆன சோல்ஜர் படத்தை சூப்பர் ஹிட் ஆக்க உறுதி பூண்டுள்ளார்.

    அழகிய தமிழ் மகன் பெரும் ஏமாற்றம் தந்ததால் அப்செட் ஆகியிருந்த விஜய், குருவியை பெரிதும் எதிர்பார்த்திருந்தார். ஆனால் குருவி விஜய் ரசிகர்களை பெரும் அதிருப்தியில் ஆழ்த்தி விட்டது. இதனால் விஜய்யும் அப்செட் ஆகியுள்ளார்.

    இந்த நிலையில் அடுத்த படத்தை அதிரடியாக கொடுக்க முடிவு செய்துள்ளார் விஜய். இந்த முறை விஜய் ஒரு இந்தி ரீமேக்கில் நடிக்கப் போகிறார்.

    பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றிப்படமான சோல்ஜர் படத்தின் கதையின் ரீமேக்கில்தான் விஜய் அடுத்த நடிக்கவுள்ளார். இயக்கவிருப்பவர் பிரபுதேவா. அய்ங்கரன் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது.

    வழக்கமாக தெலுங்கு ரீமேக்கைத்தான் விஜய் அதிகம் விரும்புவார். ஆனால் இந்த முறை இந்தி பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளார்.அந்த வகையில் வரப் போவதுதான் சோல்ஜர்.

    அப்பாஸ் மஸ்தான் இயக்கத்தில், பாபி தியோல், ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் நடிப்பில் 1998ம் ஆண்டு வெளியான படம் சோல்ஜர். சூப்பர் ஹிட் படமான சோல்ஜர் ஒரு பக்கா ஆக்ஷன் படம்.

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டது. எதிரிப் படையினராலும், துரோகிகளாலும் கொல்லப்பட்ட ஒரு ராணுவ அதிகாரியின் மகன், தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் படம்தன் சோல்ஜர் படத்தின் கதை.

    இப்படத்தின் கதை விஜய்யைக் கவர்ந்ததால் இதில் நடிக்க முடிவு செய்தார். பிரபுதேவா இயக்கத்தில் ஏற்கனவே விஜய் போக்கிரி படத்தில் நடித்து அதை சூப்பர் ஹிட் ஆக்கினார். இந்த நிலையில் 2வது முறையாக இருவரும் இணையும் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இப்புதிய படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். தசாவதாரம் படத்தின் கேமராமேன் ரவி வர்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ஆஸ்திரியா, இத்தாலி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

    ப்ரீத்தி ஜிந்தா கேரக்டரில் நயனதாரா நடிக்கவுள்ளார். பிஜூ மேனன் வில்லனாக நடிக்கிறார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X