'சுல்தான்' எப்ப வருவார்?

By Staff

Rajini
ரஜினி ரசிகர்களின் இப்போதையே ஒரே கேள்வி சுல்தான் ரிவீஸ் எப்போது என்பதுதான். காரணம் எந்திரன் படம் 85 சதவிகிதம் முடிந்துவிட்டதாக ரஜினி கூறியுள்ளார். அதே போல சுல்தான் படமும் 85 சதவிகிதம் முடிந்துள்ளதாக சௌந்தர்யா கூறியுள்ளார்.

எனில் எந்தப் படம் முதலில் வெளியாகும்? சுல்தான் எந்த மாதிரி படமாக இருக்கும்?

"இது அக்மார்க் ரஜினி படம்... நானும் அதிரடியான ரஜினி படங்களுக்கு ரசிகைதான். அந்தப் படங்களை விட அனைத்து வகையிலும் மேம்பட்ட படமாக சுல்தான் இருக்கும்.

நகரத்து ரசிகர்களாக இருந்தாலும், கிராமத்து ரசிகர்களாக இருந்தாலும், மீண்டும் மீண்டும் சுல்தான் பார்க்க திரையரங்குக்கு வரவேண்டும் என நினைக்கத் தூண்டும் அளவுக்குக் காட்சிகளில் பிரமாண்டமும் பொழுதுபோக்கு அம்சங்களும் அத்தனை சிறப்பாக வந்துள்ளன.

எடுத்த வரையில் அப்பாவுக்கு பரம திருப்தி. இன்னும் சில வாரங்களில் முழுவதுமாக படப்பிடிப்பு முடிந்துவிடும்.

இந்தப் படத்தின் பல சிறப்புகளை சர்ப்பரைஸ் பேக்கேஜாக வைத்துள்ளேன். அவை முதல் காட்சி பார்க்கும்போது மட்டும்தான் உங்களுக்கு தெரியவரும். அதுதான் அடுத்த காட்சிக்கும் உங்களை இழுத்து வரும்..., என்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த் அசைக்க முடியாத நம்பிக்கையுடன்.

'படத்தின் பட்ஜெட் ரூ.700 மில்லியன்... இதில் இன்னும் சில மில்லியன்கள் கூடினாலும் ஆச்சரியமில்லை...', என்கிறார் ஆக்கர் ஸ்டுடியோவின் தலைமை அலுவலர் (மார்கெட்டிங்) கார்த்திக். எதிர்பார்க்கும் வசூல் ரூ.2.5 பில்லியன்களாம். இதிலும் கொஞ்சம் கூடினால் வியப்பில்லைதானே!

ரிலீஸ் தேதி எந்திரனுக்கு முன்பா பின்பா?

அதை இன்னும் முடிவு செய்வில்லை. ஜனவரி 2010க்குப் பிறகு அறிவிக்கப்படும் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X