அன்பு மகளுடன் 'தல'!

இரு தினங்களுக்கு முன் சென்னை நாரத கான சபாவில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் உறவினர் மகள் நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.
ரவிக்குமாரின் அழைப்பின் பேரில் நிகழ்ச்சிக்கு தன் குடும்பத்தினருடன் முதல் முறையாக வந்திருந்தார் அஜீத். அருகில் பூரிப்புடன் அன்பு மனைவி, மடியில் ஆசை மகள்... வேறென்ன வேண்டும் என்ற நிம்மதியில் நடன அரங்கேற்றத்தை ரசித்துப் பார்த்தார் 'தல'.
சூர்யா-ஜோதிகா, தனுஷ்-ஐஸ்வர்யா என முன்னணி ஜோடிகள் தங்களது குழந்தையின் படத்தை இதுவரை வெளியில் விடவே இல்லை. அவர்களை பொது நிகழ்ச்சிகளுக்கும் அழைத்து வருவதில்லை. ஆனால் படு வித்தியாசமாக தனது குழந்தையுடன் வெளியில் வந்துள்ள அஜீத் நிச்சயம் வித்தியாசமானவர்தான்.
Comments


Click it and Unblock the Notifications