ரவீந்திரநாத் தாகூராக அமிதாப்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சமீப நாட்களாக தென்னிந்திய மொழிப் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழில் நடிக்க தயாராக உல்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் காந்தஹார் எனும் மலையாளப் படத்தில் மோகன் லாலுடன் இணைந்து நடித்தார் அமிதாப்.
அந்தப் படம் விரைவில் வெளிவர உள்ளது. இந்த நிலையில் மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கும் மலையாளப் படத்தில் தாகூர் வேடத்தில் அமிதாப் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
நோபல் பரிசு பெற்ற பின் ரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக வைத்து, 'சவுண்ட் ஆஃப் சைலன்ஸ்' என்ற படம் உருவாகிறது. இந்தப் படத்தில்தான் தாகூர் வேடமேற்கிறார் அமிதாப். முக்கிய வேடத்தில் மோகன்லாலும் நடிக்கிறார்.
Comments
amitabh bachan அமிதாப் பச்சன் மலையாளப் படம் மோகன்லால் ரவீந்திர நாத் தாகூர் malayalam mohan lal rabindiranath tagore


Click it and Unblock the Notifications