twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் ரன்வீர் சிங்: ஷாருக் கான் புகழாரம்

    By Chakra
    |

    மும்பை: தனக்கு பிறகு ரன்வீர் சிங் தான் அடுத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று மனதாரப் பாராட்டியுள்ளார் பாலிவுட் பாதுஷா ஷாருக் கான்.

    பேண்ட் பஜா பராத் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியிருப்பவர் ரன்வீர் சிங். தன் முதல் படத்திலேயே அபார நடிப்புத் திறனை வெளிபடுத்தியுள்ளார். இந்த படத்தை அன்மையில் ஷாருக் கான் பார்த்தார்.

    உடனே ரன்வீரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை புகழ்ச்சி மழையில் நனைத்துவிட்டார் ஷாருக். ரன்வீருக்கோ தலை, கால் புரியவில்லை. இருக்காதா பின்ன பாலிவுட் சூப்பர் ஸ்டார் அவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என்றல்லவா புகழ்ந்திருக்கிறார்.

    ரன்வீரிடம் முதல் படத்திலேயே பிரமாதமாக நடித்திருக்கிறீர்கள் என்றாராம். இதையெல்லாம் கேட்டு ரன்வீர் உச்சி குளிர்ந்து போனாராம். திரையுலகில் காலடி எடுத்து வைத்தவுடனேயே இப்படி ஒரு கௌரவம் கிடைக்கும் என்று ரன்வீர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

    சல்மான் ஸ்டைலில் சட்டையைக் கழற்றுவாரா அல்லது ஷாருக் பாணியில் பட்டையைக் கிளப்புவாரா ரன்வீர் என்பதை போகப் போகத்தான் பார்க்க வேண்டும்.

    English summary
    Bollywood king Shahrukh khan praised the new comer Ranveer Singh for his outstanding performance in Band Baja Baraat. Ranveer couldn't believe his ears when SRK called him as the next super star.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X