ஜெயம் ரவி - பிரபு தேவா கூட்டணி!
இந்தியில் போக்கிரியை மெகா ஹிட்டாக்கிய பிரபுதேவா அடுத்து, ஜெயம் ரவியுடன் கை கோர்க்கிறார்.
கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பாரிஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயம் ரவி இப்போது நடிக்கும் தில்லாலங்கிடி படம் முடிந்து, அமீரின் கண்ணபிரானில் நடிக்கப் போகிறார். அந்தப் படத்துடனேயே பிரபு தேவா படம் குறித்த அறிவிப்பும் வெளியாகும் எனத் தெரிகிறது. ஆனால் கண்ணபிரான் முடிந்த பிறகுதான் இந்தப் புதிய படத்துக்கான படப்பிடிப்பு துவங்குமாம்.
பாரிஸ் ஒரு அழகான இளமை துள்ளும் காதல் நகைச்சுவைப் படம் என்கிறார்கள் ஜெயம் ரவி தரப்பில்.
இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்யலாம் என பிரபுதேவா பரிந்துரைத்தாராம். ஆனால் அதற்கு ஜெயம் ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரேயடியாக மறுத்துவிட்டார்களாம். எனவே புதிய நடிகையைத் தேட ஆரம்பித்துள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











