மலையாளப் பட ரீமேக்கில் கமல்... கேள்விக்குறியான செல்வராகவன் படம்!

இப்போது கமல் உடனடியாக நடிக்கும் படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ட்ராபிக்கின் ரீமேக்கில். ஒரிஜினலாக இந்தப் படத்தை இயக்கிய ராஜேஷ் பிள்ளைதான் இந்த ரீமேக்கையும் இயக்கவிருக்கிறார்.
தான் அடுத்து நடிக்கப் போகும் படம் இந்த ட்ராபிக் ரீமேக்தான் என்பதை கமல்ஹாஸனும் நேற்று உறுதிப்படுத்தினார். கேரளாவில் நடந்த இந்தப் படத்தின் 100வது நாள் விழாவில் பங்கேற்ற அவர், இந்தப் படம் அப்படியே என்னை ஈர்த்துவிட்டது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில், இதே தொழில்நுட்பக் குழுவுடன் பணியாற்ற விரும்புகிறேன், என்றார்.
இதன் மூலம், செல்வராகவன் படத்தில் நடிப்பது இப்போதைக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் கமல்.
அதுமட்டுமல்ல, படத்தை எப்போது ஆரம்பிக்கலாம் என்று கேட்க கமல் அலுவலகத்துக்குப் போன செல்வராகவனை வெளியிலேயே காக்க வைத்து அனுப்பிவிட்டார் என்ற பேச்சும் கோலிவுட்டில் அடிபடுகிறது!!


Click it and Unblock the Notifications











