தங்கர் படத்தில் மாதவன்

By Staff

Madhavan with Neetu Chandra
தமிழ்த் திரையுலகின் முத்திரை இயக்குநர்களில் முன்னணியில் இருப்பவரான தங்கர்பச்சானுடன் கை கோர்க்கிறார் மாதவன்.

இருவரும் இணைவது இது முதல் முறை. ஆனால் பல தலைமுறைகளுக்கு இந்தப் படம் பேசப்படும் என்று தங்கர் தரப்பு உற்சாகத்துடன் சொல்கிறது.

தொலைந்து போனவர்கள். இதுதான் மாதவனும், தங்கர்பச்சானும் இணையும் படத்தின் டைட்டில்.

வழக்கமான மாதவனை இந்தப் படத்தில் பார்க்க முடியாது என்கிறார் தங்கர். ஆனால் நமக்கு பழக்கமான கேரக்டரைத்தான் மாதவன் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டப் போகிறேன் என்றும் விளக்குகிறார்.

படத்தில் இன்னொரு முக்கிய அம்சமும் உள்ளது. அது சத்யராஜ். ஆம், மாதவனுடன் இணைந்து நடிக்கிறார் சத்யராஜ். ஒன்பது ரூபாய் நோட்டு மூலம் கிடைத்த அனுபவம், அறிமுகத்தால் தங்கர் கேட்டவுடன் சம்மதித்து விட்டாராம் சத்யராஜ்.

மாதவனுக்குப் படத்தில் ஜோடியும் உண்டு. அவர் பிரியாமணி.

இப்படி மணி மணியான கலைஞர்களுடன் கை கோர்க்கும் தங்கர்பச்சான், ஒன்பது ரூபாய் என்ற அரிய பொக்கிஷத்தைப் போலவே, இந்த தொலைந்து போனவர்களையும் இழைக்கப் போகிறாராம்.

பார்த்து மகிழ நாங்களும் ரெடி..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X