வியட்நாம் போகும் ரஜினி

By Staff

Rajini with Nayanatara
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது மகள் செளந்தர்யா தயாரித்து இயக்கும் சுல்தான் தி வாரியர் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்பதற்காக வியட்நாம் செல்கிறார்.

செளந்தர்யா முற்றிலும் வித்தியாசமான முறையில், பெரும் பொருட் செலவில் உருவாக்கும் அனிமேஷன் படம் சுல்தான் தி வாரியர். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் வியட்நாமில் நடைபெறவுள்ளது. இதில் ரஜினி கலந்து கொள்கிறார்.

அங்கு நடைபெறும் படப்பிடிப்பில், சில சண்டைக் காட்சிகளும், ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்படவுள்ளதாம்.

இதற்கிடையே, குசேலன் படக்கதையில் இயக்குநர் பி.வாசு செய்துள்ள மாற்றங்களை, ஒரிஜினல் கதாசிரியரான மலையாள நடிகர் சீனிவாசன் பாராட்டியுள்ளாராம்.

ஆலப்புழையில் நடந்த படப்பிடிப்புக்கு சீனிவாசன் திடீர் விசிட் அடித்து ரஜினியை சந்தித்துப் பேசினாராம். கிட்டத்தட்ட இருவரும் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனராம். அப்போது தனது ஒரிஜினல் கதையான மலையாளத்து கத பறயும்போள் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்துள்ளதாக இயக்குநர் பி.வாசு சீனிவாசனிடம் தெரிவித்துள்ளார்.

அதைப் பொறுமையுடன் கேட்ட சீனிவாசன், அத்தனையும் அபாரம் என்று வாசுவைப் பாராட்டினாராம்.

கத பறயும் போள் படத்தில் சீனிவாசன், நாவிதர் வேடத்தில் நடித்திருந்தார். அவருடைய ஆத்ம நண்பராக, சூப்பர் ஸ்டார் நடிகராக மம்முட்டி நடித்திருந்தார். மம்முட்டி ரோலைத்தான் தமிழில் ரஜினி செய்கிறார். சீனிவாசன் வேடத்தில் பசுபதி நடிக்கிறார்.

தனது இமயமலை பயணத்தை முடித்துவிட்டு ரஜினி வியட்நாம் செல்வார் எனத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X