சல்மான் ஒன்றும் நல்ல முன்மாதிரி கிடையாது: தந்தை சலிம்
மும்பை: சல்மான் கான் சிறந்த முன்மாதிரி கிடையாது என்று அவரது தந்தை சலிம் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைகளின் நாயகனாக வலம் வருபவர் இந்தி நடிகர் சல்மான் கான். இருந்தாலும் அவருக்கென்று கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அவர் ஒன்றும் சிறந்த முன்மாதிரி கிடையாது என்று சல்மானின் தந்தையே தெரிவித்துள்ளார்.
இது குறித்து சல்மானின் தந்தை கூறியதாவது,
எனது மகன் சல்மான் அவர் சகோதரர்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ சிறந்த முன்மாதிரி கிடையாது. ஏனென்றால் சல்மான் எப்பொழுதுமே எந்த ஒரு முறையையும் பின்பற்றாமல் வாழ்பவர். சல்மான் கானுக்கு குழந்தைகள் என்றால் அலாதிப் பிரியம். இது அவரது ரசிகர்களுக்கும் தெரியும். திருமணம் செய்து, குழந்தை பெற்றுக் கொள்ள இது தான் சல்மானுக்கு உகந்த நேரமில்லையா?
சல்மானுக்கு பிரச்சனை என்னவென்றால் அவர் வாழ்வில் வருபவர்கள் எல்லாம் திரை நட்சத்திரங்களாக உள்ளனர். அவர்கள் சல்மான் வாழ்க்கையில் நுழையும்போதே அவரைத் திருமணம் செய்து கொண்டு, குழந்தைகள் பெறும் எண்ணத்தோடு நுழைவதில்லை. சல்மானை வைத்து திரையுலகில் பெரிய இடத்திற்குச் செல்வது தான் அவர்கள் குறிக்கோள் என்றார்.
அப்பா வாயால் சல்மானுக்கு இப்படி ஒரு பாராட்டா?


Click it and Unblock the Notifications











