Don't Miss!
- Technology நிலவை நோக்கி மீண்டும்-மீண்டும் படையெடுக்கும் ISRO.. முதல் இந்தியன் நிலவில் கால் பதிக்கும் வரை ஓயாது..
- Finance இவங்களுக்கு எல்லாம் ஜாக்பாட்.. பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டாம்..!
- News ஆஹா.. உபி-இல் பாஜகவுக்கு தலைவலி! ராஜ்புத் சமூகம் எடுத்த முடிவால் பெரிய சிக்கல்! கையை பிசையும் தலைகள்
- Lifestyle குரு பெயர்ச்சி 2024: மே 01 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
அஜீத்துடன் சிம்பு ஆட்டம்!
சிம்பு சமீப காலமாக தீவிர அஜீத் ரசிகராகி விட்டார். தனது படம் ஒன்றில் அஜீத் ரசிகராகவே அவர் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அஜீத்துடன் இணைந்து ஒரு படத்தில் தலை காட்டுகிறார்.
சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து வரும் படம் அசல். அஜீத் நாயகன். இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு அஜீத்துடன் இணைந்து ஆடுகிறாராம் சிம்பு. படத்தின் ஹைலைட்டாக இந்தப் பாடல் இருக்குமாம்.
ஏற்கனவே சில ஹீரோக்களுக்காக பாடல்கள் பாடியுள்ளார் சிம்பு. ஆனால் தற்போதுதான் இன்னொரு முன்னணி ஹீரோவுடன் இணைந்து திரையில் தோன்றுகிறார்.
அதேபோல தனது நண்பரான எஸ்.ஜே.சூர்யா தெலுங்கில் இயக்கி வரும் புலி படத்தில், சூர்யாவின் கோரிக்கைக்கேற்ப ஒரு பாடலுக்கு ஆடியுள்ளாராம் சிம்பு. படத்தின் நாயகன் பவன் கல்யாணுடன் இணைந்து இந்த பாடலில் ஆடுகிறாராம் சிம்பு.
இந்த புலி படத்திற்கு இன்னொரு பின்னணிக் கதை உள்ளது. முதலில் இதை தமிழில் விஜய்யை வைத்துத்தான் இயக்குவதாக இருந்தார் சூர்யா. விஜய்யும் சம்மதித்து எல்லாம் ரெடியான நிலையில் திடீரென நடிக்க மறுத்து விட்டார் விஜய்.
என்ன காரணம் என்று அப்போது கூறப்பட்டது என்றால் - புலி கதையில் சிம்புவின் ஆலோசனையின் பேரில் பல மாற்றங்களை செய்திருந்தார் எஸ்.ஜே.சூர்யா. இதனால் அப்செட் ஆன விஜய் புலிக்கு கும்பிடு போட்டு விட்டாராம்.