'மெளனம் பேசியதே' நந்தாவுக்கு 'கெட்டிமேளம்'!

மெளனம் பேசியதே படம் மூலம் அறிமுகமான நந்தா தமிழ் சினிமாவில் பெரிய அளவில் நடிகராக பிரகாசிக்க முடியவில்லை. நல்ல நடிகராக இருந்தும் பிரேக் கிடைக்கவில்லை.
கோடம்பாக்கம், புன்னகைப் பூவே, ஈரம், அகரம் ஆகிய படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது. தற்போது சாயா சிங்குடன் அனந்தபுரத்து வீடு என்ற படத்தில் நடித்து வருகிறார் நந்தா.
இந்த நிலையில் அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளதாம். தீவிரமாக பெண் பார்த்து வருகிறார்களாம். வீட்டில் பார்த்து வைக்கும் பெண்ணை போதும் என்று அவர் கூறி விட்டாராம். யாரையும் இதுவரை காதலிக்கவில்லையாம். காரணம், யார் மீதும் காதல் வரவில்லையாம்.
அனந்தபுரத்து வீடு படத்தை முடித்து விட்டு வேலூர் மாவட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார் நந்தா. இதில்அவருக்கு ஜோடி போட்டிருப்பவர் தெத்துப் பல் அழகி பூர்ணா.
Comments


Click it and Unblock the Notifications