வயதான கேரக்டர்களில் நடித்தால் முத்திரை குத்தி விடுவார்கள்-விவேக்

தனுஷ், ஜெனிலியா நடித்துள்ள உத்தமபுத்திரன் படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு விவேக் பேசுகையில்,
தனுஷ் மாமாவாக இதில் நடித்துள்ளேன். சிவாஜியில் ரஜினி மாமாவாக நடித்து விட்டேன். வயதான வேடங்களில் நடிப்பதால் அதுவாகவே முத்திரை குத்தி விடுவார்கள். எனவே தனுசுடன் நடிக்க கேட்டபோது மறுத்தேன். தனுஷ் நேரிலும் போனிலும் பல தடவை என்னை வற்புறுத்தி நடிக்க வைத்து விட்டார். படம் முடிந்ததும் பார்த்தேன். எனது கேரக்டர் அற்புதமாக வந்துள்ளது. எனது சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக இது இருக்கும் என்றார்.
தனுஷ் பேசுகையில், உத்தமபுத்திரன் படம் சிறப்பாக வந்துள்ளது. இதில் விவேக்கை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தேன். இது தெலுங்கில் ஹிட்டான ரெடி படத்தின் ரீமேக். அந்த படத்தை பார்த்ததுமே குறிப்பிட்ட கேரக்டருக்கு விவேக்தான் பொருத்தமானவர் என்று முடிவு செய்தேன். அவர் இதில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு நன்றி. இடைவேளைக்கு பிறகு விவேக்தான் படத்தை தோளில் தாங்குவார். அந்த அளவு முக்கியமான கேரக்டராக அமைந்துள்ளது என்றார்.
கடைசி வரை காலேஜ் பையனாகவே நடிக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ விவேக்.


Click it and Unblock the Notifications











