'வில்லு' விஜய்-நயனதாரா!

விஜய், பிரபுதேவா மீண்டும் இணைகின்றனர். இருவரும் முன்பு இணைந்து கொடுத்த படம் போக்கிரி. அப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இவர்களின் 2வது படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்படத்தில் விஜய்யுடன் ஜோடி சேருகிறார் நயனதாரா. கோடம்பாக்கம் ஏரியா பாட்டுக்கு விஜய்யுடன் குத்தாட்டம் ஆடிய நயனதாரா, முதல் முறையாக விஜய்யுடன் தனி நாயகியாக நடிக்கவுள்ளார்.
இந்தப் படத்திற்கு முதலில் சிங்கம் என பெயரிட்டிருந்தனர். ஆனால் இப்பெயரை இயக்குநர் ஹரி ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்ததால், அதை மாற்றி வில் என புதுப் பெயர் சூட்டினர்.
ஆனால் இதே பெயரில், எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கம் பிளஸ் நடிப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. இதனால் விஜய் படப் பெயர் மாறுமா, மாறாதா என்ற குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று முதல் விஜய், பிரபுதேவாவின் புதுப் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. படத்தின் பெயரை வில் என்பதற்குப் பதில் வில்லு என மாற்றி வைத்துள்ளனர்.
அய்ங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். ரவிவர்மன் கேமராவைக் கையாளுகிறார்.
நல்லா 'ஜில்லு'ன்னு எடுங்க!


Click it and Unblock the Notifications











