செல்வா படம்..விஷால் விலகல்!

தனது இந்த முடிவை, அவர் சமீபத்தில் தொடங்கியுள்ள வலைப்பூவில் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் இப்படி எழுதியுள்ளார்:
எந்தப் படமாக இருந்தாலும் டிஸ்கஷனிலிருந்து படம் ரிலீஸாவது வரை 100 சதவிகிதம் இன்வால்வ் ஆவது என் இயல்பு (அதாவது முழுசா மூக்கை நுழைப்பது!!).
ஆனால் செல்வராகவனுடன் நான் இணையும் இந்தப் படத்தில் எனக்கு ஒரு ஈடுபாடு இதுவரை வரவில்லை என்பதை உணர்கிறேன். அப்படி ஒரு படம் நடித்தால் அதன் முடிவு விரும்பத்தகாததாகவும் இருக்கலாம். எனவே படத்தின் பூர்வாங்க வேலைகள் துவங்கும் முன்பே விலகிக்கொள்வது நல்லது என நம்புகிறேன். என்னுடைய இந்த முடிவுக்கு வேறு எந்த காரணத்தையும் குறிப்பிட விரும்பவில்லை' என அதில் எழுதியுள்ளார்.
நீங்க முழுசா ஈடுபாடு காட்டிய ரூ.35 கோடி (சொன்னது விஷால்தான்) பட்ஜெட் 'சத்யம்' நிலைமை, ராமலிங்கராஜுவின் சத்யத்தை விட மோசமாகிப் போனதே, அது ஏன் விஷால்!!


Click it and Unblock the Notifications











