'பி, சி' விரும்பும் பரத்!

By Staff

Bharat and Meera jasmine
பி, சி சென்டர்களில் ஜெயி்ப்பதையே நான் விரும்புகிறேன். அங்குதான் எனது உண்மையான வெற்றி அடங்கியுள்ளது என்கிறார் பரத்.

காதல் நாயகன் பரத் வெற்றி நாயகனாக கோலிவுட்டை வலம் வந்து கொண்டுள்ளார். பாய்ஸ் பட நாயகர்களில் இவர் மட்டுமே தமிழில் வெற்றி பெற்றுள்ளார்.

தொடர்ந்து கிராமப்புற கேரக்டர்களிலேயே நடித்து வருகிறார் பரத். அதிலும் மதுரை பின்னணியில் அவர் நடித்த படங்கள் எல்லாமே ஹிட்.

ஏன் இப்படி கிராமப்புற கேரக்டர்களிலேயே நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. தானாக அவை அமைகின்றன. இப்போது ஜப் வி மெட் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறேன். இதில் சிட்டி பாய் ஆக வருகிறேன்.

எனக்கு கிராமப்புற கேரக்டர்கள்தான் பொருத்தமாக இருக்கிறது. குறிப்பாக பி மற்றும் சி சென்டர்களில்தான் எனக்கு உண்மையான வெற்றி கிடைக்கிறது. அங்குதான் திறமைக்கு சபாஷ் போடும் ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே அங்கு வெற்றி பெறுவதையே நான் அதிகம் விரும்புகிறேன் என்கிறார் பரத்.

பரத் பல படங்களில் நடித்து விட்டாலும் கூட அவரது விருப்பப் பட்டியலில் இன்னும் காதல்தான் உள்ளதாம். அந்தப் படத்துக்கு இணையே கிடையாது. என்னை தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டிய படம் அது. எனவே எப்போதுமே அதற்கு எனது மனதில் நம்பர் ஒன் இடம்தான் என்கிறார் பரத்.

இமேஜ் வலைக்குள் சிக்காமல் அதகளம் செய்து வரும் பரத் ஜப் வி மெட்டிலும் சத்தாய்ப்பார் என நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X